News Channel

Rifah chamber of commerce and industry Ifthar with network meeting

கும்பகோணம், 07.03.2026:
ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரி – சக்சஸ் சாப்டர் சார்பில் ரமலான் சிறப்பு ரிஃபா நெட்வொர்க் மீட்டிங் மற்றும் இப்தார் நிகழ்ச்சி கும்பகோணம் லீபென்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ரிஃபா தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஜனாப் முல்லா யூனுஸ் சேட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர்களை சந்தித்து வழிகாட்டும் உரையாற்றினார்.

நிகழ்ச்சி அஸர் தொழுகையுடன் துவங்கி, தொடர்ந்து நெட்வொர்க் மீட்டிங் நடைபெற்றது. இதில் ரிஃபா உறுப்பினர்கள் தங்கள் தொழில் தொடர்பான அறிமுகங்களை வழங்கி, ஒருவருக்கொருவர் வணிக வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

மாலை மகரிப் தொழுகையை தொடர்ந்து இப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு ரமலான் மாதத்தின் ஆன்மிகத்தையும், தொழில் வளர்ச்சிக்கும் இடையிலான முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் உறுப்பினர்களுக்கிடையே நெட்வொர்க்கிங், வணிக ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவம் மேலும் வலுப்பெற்றது.