News Channel

மக்கள் சேவை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பமாக, திண்டுக்கல் கிளையின் சார்பாக மாதந்தோறும்  ஏழை,எளியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக, கிளைச் சகோதரர்களின் ஒத்துளைப்போடு கிளைச் சகோதரர்களின் (ஆடவர் துணிகள் மட்டும்) உடைகளை (புதிய துணிகளுடன் சேர்த்து) தொடர்ந்து 3 முதல் 4 வாரங்கள் வரை வசூலித்து திண்டுக்கல்லைச் சுற்றி வாழ்கின்ற ஏழ்மை, எளிய இஸ்லாமிய குடும்ப சகோதரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் கிளைச் சகோதரிகள், பெண்கள், சிறுவர் சிறுமியர், குழந்தைகள் ஆகியோரின் உடைகளைச் சேகரித்தும், இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ வழங்க கிளையின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.