News Channel

மக்களின் தேர்தல் அறிக்கை- (People's Manifesto-2026)

"மக்களின் தேர்தல் அறிக்கை -2026 வெளியீடு"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு&புதுச்சேரி 
சார்பாக 
மக்களின் தேர்தல் அறிக்கை- 
(People's Manifesto-2026)
வெளியிடும் சிறப்பு நிகழ்ச்சி 
இன்று வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் 
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மக்களின் தேர்தல் அறிக்கையை
மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ 
அவர்கள் வெளியிட்டு 
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் 24 பக்கங்களைக் கொண்ட
தேர்தல் அறிக்கையை குறித்து விரிவான உரை நிகழ்த்தினார்கள். 

அவரது உரையில்..!
- ஒழுக்கத்தில் சிறந்த தமிழ்நாடு 
- நீதியில் சிறந்த தமிழ்நாடு 
- சமச்சீரான வளர்ச்சியில் தமிழ்நாடு 
- சுத்தம், சுகாதாரம் போற்றும் தமிழ்நாடு 
- ஊழல் இல்லாத தமிழ்நாடு 
- மது போதை இல்லா தமிழ்நாடு 
- மக்கள் நல அரசு 
- கல்வி
- வேளாண்மை 
என்று  தமிழகத்திற்கு  தேவையான பல்வேறு விஷயங்களை மாநில முழுவதும் பலதரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு
மக்களின் எண்ணங்கள், தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 
அதன் அடிப்படையில் இந்த மக்களின் தேர்தல் அறிக்கை 2026 உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

மாநிலச் செயலாளர்கள் 
S.N. சிக்கந்தர் மற்றும் 
அஜித் லுத்புல்லாஹ் ஆகியோர்  மக்களின் தேர்தல் அறிக்கையின் சில பக்கங்களையும் 
அதன் தேவைகளையும் 
அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

மேலும், 
அமைய இருக்கும் புதிய அரசு  
மேற்கண்ட விஷயங்களில்  கவனம் செலுத்தி அனைத்து துறையிலும் வளர்ந்த தமிழ்நாடாக மாறுவதற்கு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

மேலும்,
பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் அவர்கள் பதில் அளித்தார்.

இந்நிகழ்வில் JIH மாநில துணைத்தலைவர் 
 T.யூசுப் பாஷா 
மாநில அமைப்பு செயலாளர்  K.ஜலாலுதீன்
மாநில ஆலோசனை குழு உறுப்பினர்கள் T.அஜீஸ் லுத்புல்லாஹ், V S முஹம்மது அமீன், 
மாநில செயலாளர் S N சிக்கந்தர்,மாநில ஊடகத்துறை செயளாலர் S.சாகுல் ஹமீத் 
மாநில மகளிர் அணி செயலாளர் சகோதரி பாத்திமா ஜலால்
மற்றும் இயக்க ஊழியர்கள் 
நாளிதழ்கள்,டிவி சேனல்கள், youtubers & ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

https://www.facebook.com/share/p/1KHLSUDpTs/