கோவை கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் இயங்கிவரும் லைஃப்ஜோன் கிளினிக்
மக்களுக்கான பொது மருத்துவ சேவையை குறைந்த கட்டணத்தில் சிறந்த முறையில் டாக்டர்.
அனிஷா பானு அவர்கள் மூலமாக வழங்கி வருகிறது.
மேலும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனைகள் வழங்கிவரும் லைஃப்ஜோன்
ரத்தப் பரிசோதனை மையம், 15 சதவிகித தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கிவரும் லைஃப்ஜோன்
பார்மசி போன்றவை மூலமாக மருத்துவ சேவையாற்றி வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது மகப்பேறு துறையில் 28 ஆண்டுகள் அனுபவிக்க டாக்டர்.
பாத்திமுத்து நூரானியா அவர்கள் மகளிர் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள்
அனைத்திற்கும் சிகிச்சை வழங்க உள்ளார்.
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை சென்ட். மேரிஸ் மருத்துவமனை RMO டாக்டர். ஆக்னஸ் அவர்கள் தொடங்கி
வைத்தார்கள். உடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். உமர் ஃபாரூக் அவர்கள் உடனிருந்தார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!