அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிரணி
ஏற்பாடு செய்திருந்த
ஆலிமாக்களுக்கான மதுரை மண்டல மாநாடு
16/01/2025 வியாழக்கிழமை மதுரையில் நடைபெற்றது.
மதுரை மகளிரணி துணைப்பொறுப்பாளர் ஆலிமா நஜ்மா சுல்தானா கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மதுரை மகளிரணி பொறுப்பாளர் ஜரினா யூசுஃப்
வரவேற்புரையாற்றினார்
மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனிஃபா மன்பயீ அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்
மாநில துணைத் தலைவர்
K.M சிராஜ் அஹமது அவர்கள் தொடக்க உரையாற்றினார்கள்
"சமுதாய புத்தமைப்பில் ஆலிமாக்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில்
கோவை ஹிதாயா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியை ஆலிமா சுமைய்யா ஹாதியா அவர்கள் சிறப்புரையாற்
றினார்
"தீனை நிலைநாட்டுவதில் ஆலிமாக்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் திருச்சி அஸ்ஸலாம் அரபிக்கல்லூரி பேராசிரியர், மௌலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்
தேனி மண்டல மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி ஃபரிதா அபுதாஹிர் நிறைவுறையாற்றினார்கள்.
மதுரை GIO பொறுப்பாளர் ஆலிமா நூர்மஜியா வழிநடத்தி நன்றியுரையாற்றினார்
மதுரை,கம்பம்,தேனி, திண்டுக்கல், சின்னமனூர்,
உத்தமபாளையம், மேலூர், ராமநாதபுரம்,விருதுநகர், திருமங்கலம்,தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆலிமாக்கள், ஜமாஅத் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள்,GIO மாணவிகள் உட்பட ஏறக்குறைய 210 பேர்
பங்கேற்றார்கள்.
அவர்களில்
ஆலிமாக்கள் 165 பேர் கலந்து கொண்டனர்
ஆலிமாக்கள் அனைவரும், "எங்களது பொறுப்பை உணர்ந்து கொண்டோம் செயல்பட வேண்டுமே என்ற உணர்வுடன் வீடு திரும்புகின்றோம்" என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.