News Channel

JIH ladies wing Activity

அல்ஹம்துலில்லாஹ்  ஜமாத்தே  இஸ்லாமி ஹிந்தின் குடியாத்தம் கிளையின் சார்பாக சித்தூர் கேட் பகுதியில் முனாப் டிப்போவில்  இயங்கிக் கொண்டிருக்கும்  பெண்களுக்கான தையல் பயிற்சி  மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அன்று  (31-01-25) பயிற்சி பெற்று முடித்த 10 பெண்களுக்கு ( Third Batch )க்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலானா மௌலவி சையது அப்துல் காதர் உமரி சாஹிப் அவர்கள்  திருக்குர்ஆனின் ஒளியில் சுருக்க முன்னுரையுடன் ஆரம்பிக்கப்பட்டு  குடியாத்தம் கிளையின் அமிரே
மகாமீயின் வாழ்த்து உரையுடன் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி கமலி அவர்கள் பயிற்சி பெற்ற பெண்களுக்கும் இனி பயிற்சி பெற வந்து அமர்ந்து இருக்கும்  பெண்களுக்கும் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பண்புகளை பயிற்சிக்கு முன் மற்றும் பயிற்சிக்குப் பின் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் இந்த இயக்கத்துக்கும் இந்த இயக்கத்தின்
சார்பாக பயிற்சி   அளித்து வரும் ஆசிரியரின்
மாண்புக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் உங்களுடைய செயல்பாடுகள் அமையட்டும்  என்று வாழ்த்தி அவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக  சுருக்கமான அறிவுரை வழங்கினார். பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு ஃபீட்பேக்ஸ் கேட்கப்பட்டது  அவர்கள் அனைவரும்
 ஃபீட்பேக்ஸ் கொடுத்தனர். நிகழ்சியை அறிவியல் ஆசிரியர்  ஆலீ  ஜனாப் முஹம்மத் நூருல்லா சாஹிப் தொகுத்து வழங்கினார்  நிறைவுறையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஜனாப் அப்துல்லா நாசிர் சாஹிப் மற்றும்  M.G.யாசர் அராபாத் சாகிப்  அவர்கள்  கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள் இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே