News Channel

Uppalayapuram events

அஸ்ஸலாமு அலைக்கும் 
 உப்பிலியபுரம் JIH. மகளிர் அணி சார்பாக,  உப்பிலியபுரம் ஜாமிஆ பள்ளிவாசலில்  நட்சத்திர மின்னல்களின் ஒளி விழா நிகழ்ச்சி 14/1/2025 மற்றும் 15/1/2025 என இரு தினங்கள் சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். 

இவ்விழாவில் உறுப்பினர்,  ஊழியர்கள், GIO பெண்கள்  என அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்றினார்கள்.

14/1/2025 அன்று 4 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

 இப்போட்டியில் 51 குழந்தைகள் 65 பெண்கள் என 115 பேர் பங்கு பெற்றனர். 

15/1/2025  அன்று பெண்கள், குழந்தைகள், ஆண்கள்  என 350 பேர் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ,
1. ஜனாப் - சையது முஹம்மது - திருச்சி மண்டல பொறுப்பாளர் -JIH
2. மௌலானா - சுஃப்யான் அஷ்ரஃபி
கலந்து கொண்டார்கள்.

 நிகழ்ச்சியின் ஆரம்பமாக  சகோதரி ஷபானா. ஓதினார்.

  அதன் தர்ஜுமாவை சகோதரி நூரா மொழிபெயர்த்தார்.

 நிகழ்ச்சியின்  தொகுப்புரை சகோதரி ரூபினா வழங்கினார்.

மௌலானா - சுஃப்யான் அஷ்ரஃபி. அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

 ஜனாப் - சையது முஹம்மது - திருச்சி மண்டல பொறுப்பாளர் -  JIH அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றி னார்.


 மறுமையில் மனிதனின் நிலை  என்ற தலைப்பில் senior gio பெண்கள் செயல் முறை விளக்கம் நிகழ்த்தினர்.

 *சுன்னாவின் ஒழுங்குகள்  என்ற தலைப்பில் junior gio குழந்தைகள் செய்முறை விளக்கம் நிகழ்த்தினார்கள்.

 பெண்களும் மார்க்க போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.
1. குழந்தை வளர்ப்பு - கட்டுரை போட்டி
2. சூரா அந்நூர் தர்ஜுமா - வினாடி வினா
3. அழிக்கப்பட்ட சமூகம் - பேச்சு போட்டி
போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. 

 அனைவருக்கும் மதிய  ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. 

 விழாவின் இறுதியில் சிறப்பு  பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்