அஸ்ஸலாமு அலைக்கும்,
மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றம் மைய நோக்கத்தையொாட்டி 08-10-2023 அன்று மாலை கருர் கிளை பெண்கள் வட்டம் சார்பில் வெங்கமேடு பகுதியில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து சகோதரி.ருக்சானா அவர்கள் உரை நிகழ்த்தினார். அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு இந்த உலகத்திற்கு அருட்கொடையாக, ஒரு முன் மாதிரியாக பின்பற்றதக்கவராக திகழ்ந்தார் என்று துணை பொறுப்பாளர்.தாரா அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் சகோதர சமுதாயத்தை சார்ந்த பெண்கள் எழுப்பிய உருவ வழிபாடு, தர்ஹா வழிபாடு, பள்ளிவாசலில் ஏற்றத்தாழ்வுகள் உண்டா? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. சகோதர சமுதாயத்தை சார்ந்த 5 சகோதரிகள் உட்பட 40 பெண்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இஸ்லாமிய பெண்களுக்கு நபிகளாரை குறித்து மற்றவர்களுக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவமும், அவரை நாம் பின்பற்ற வேண்டியதன் வழிமுறை குறித்தும் உணர்த்தப்பட்டது.