மஸ்ஜிதுகள் கவ்ஸர் பள்ளிவாசல் - மதீனத்துல் உலூம் மதரஸாவில் குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா.
கோவை மஸ்ஜிதுல் கவ்ஸரில் நடைபெற்று வரும் மதீனத்துல் உலூம் மதரஸாவின் ஆண்டு விழா 31 மே 2024 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதரஸா மாணவர்கள் திருக்குர்ஆன் ஓதுதல், இஸ்லாமிய பாடல்கள் பாடுதல், நாடகம் போன்ற பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் தொடர்ச்சியாக மஸ்ஜிதுல் இஹ்ஸான் தலைமை இமாம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து குர்ஆன் ஓதி முடித்த மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை மௌலவி இஸ்மாயில் இம்தாதி அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். உமர் ஃபாரூக் அவர்களும் இணைந்து வழங்கினர். மேலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை வடக்கு மண்டல தலைவர் ஜனாப். சையத் இப்ராஹீம் அவர்களும், உடன் மஸ்ஜிதுல் கவ்ஸர் பள்ளிவாசலின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.