News Channel

திருச்சியில் புதிய பெண்கள் மேம்பாட்டு மையம் திறப்பு

அல்ஹம்துலில்லாஹ்  03/06/2024 அன்று திருச்சி அண்ணா நகர் பகுதியில் பெண்கள் மேம்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டது.

இதை JIH திருச்சி மாநகர தலைவர் ஜனாப்.Dr.ஹஜ் மொய்தீன் அவர்கள் திறந்து வைத்தார்கள் .
JIH திருச்சி மாநகர செயலாளர் ஜனாப்.Dr.ஷேக் மொய்தீன் மற்றும் சாலிடாரிட்டி ன் மாநிலத் தலைவர் ஜனாப்.கமாலுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள். 
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மகளிர் அணி பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள் , ஊழியர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.   

 இதில்  மதரஸா, டியூஷன் சென்டர், நூலகம், தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல், பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இவையெல்லாம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.  

எல்லாப் புகழும் இறைவனுக்கே ...