திருச்சியில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
சமூகநல்லிணக்கத்தை வலுவாக்கும் பரஸ்பரப் புரிதலுக்கான ஒன்றுகூடல்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்டம் சார்பில் சகோதர சமுதாய நண்பர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி 31.03.2024 அன்று KMS ஹக்கீம் பிரியாணி ஹாலில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவர். தமிழ்ச்செம்மல் வீ. கோவிந்தசாமி மற்றும் திருச்சி கத்தோலிக்க திருச்சபை புனித ஜான்பால் உரையாடல் மன்ற இயக்குனர் அருட்பணி முனைவர். க. சார்லஸ் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கூறி, இத்தகைய நிகழ்ச்சிகள் தேசத்தில் சமூக நல்லிணத்தை வலுவாக்கும் என்று பாராட்டினர்.
ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த், கும்பகோணம் கிளைத் தலைவர் ஜனாப். முஹம்மது யூனூஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பு தனிநபரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் தெளிவாக எடுத்துரைதார்கள்.
முன்னதாக ஜனாப். காதர் மீரான் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார். முனைவர். அப்துல் ரஜாக் அனைவரையும் வரவேற்று துவக்கவுரையாற்றினார். முனைவர். ஹஜ் மொய்தீன் தலைமையுரை ஆற்றினார். ஜனாப். நவாஸ்கான் நன்றித் தெரிவித்தார். முனைவர். சலாஹுதீன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
இதில் 60க்கும் மேற்ப்பட்ட சகோதர சமுதாய நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புகழனைத்தும் இறைவனுக்கே!