News Channel

திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியில் பெண்கள் மேம்பாட்டு மையம் திறப்பு விழா

திருச்சி கூனிபஜார் ஆண்கள் மற்றும் பெண்கள் ஊழியர் வட்டம் சார்பாக 
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவை, கணவனால் கை விடப்பட்ட கைம்பெண்களின் உயர்விற்காக
 "மேம்பாட்டு மையம்" இன்ஷா அல்லாஹ் வருகிற 03/12/2023 அன்று கூனிபஜார் பகுதியில் திறக்கப்படவுள்ளது.
 இந்த மேம்பாட்டு மையத்தின் நோக்கம் சமுதாயத்தில் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு தையல் பயிற்சி, 
ஆரி ஒர்க், மெஹந்தி பயிற்சி, கூடை பின்னுதல், பெண்கள் தங்கள் வீட்டில் செய்த மசாலா, துணிமணிகள், கைவினை பொருட்கள் போன்றவற்றை விற்பதற்கு வார சந்தை ஏற்பாடு.

டியூஷன், அரசின் நலத்திட்ட உதவி விண்ணப்ப மையம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையம் என பல பணிகளுக்காக இந்த சேவை மையம் திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்

 எண்ணங்கள் நிறைவேற இறையருள் துணை நிற்கட்டும்....