• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News

சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருடன் சந்திப்பு


தமிழ்நாடு மாநில சிறுபானமையினர் ஆணையத்தின் தலைவர் திரு.சா.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுடன் ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் மாநில பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரு சில இடங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் முஸ்லிம் மாணவிகள் கல்வியை தொடர்வதில் உள்ள சவால்கள் விவாதிக்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி நடைமுறைகளுக்கு உட்பட்டு முஸ்லிம் பெண்கள் வணக்கமாக கருதும் ஹிஜாப் அணிவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பான முறையான அம்சங்கள் பின்பற்றுவது தொடர்பான அம்சங்கள் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில துணைத்தலைவர் ஐ.ஜலாலுதீன், மாநிலச் செயலாளர்கள் எஸ்.என்.சிக்கந்தர், யூனுஸ் சேட் மற்றும் சென்னை மெட்ரோ ஆலோசனைக்குழு உறுப்பினர் புர்கான்ஷா கலந்து கொண்டனர்.