இறைத்தூதர் வாரம் 2011

திருச்சியில் மாபெரும் அரங்கக் கூட்டம்

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு திருச்சியில் 6.3.2011 ஞாயிறு மாலை தேவர் மஹாலில் நடைபெற்றது.  சகோ.அப்பாஸ் அவர்களின் குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.  திருச்சி மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர் சகோ.சையத் முஹம்மத் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.  மண்ணக மக்களுக்காய் விண்ணக தூது என்ற தலைப்பில் டாக்டர் KVS.ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.  இஸ்லாம் என்பது வாழ்வியல் கோட்பாடு…

கரூரில் இறைத்தூதர் வார சிறப்பு நிகழ்ச்சி

06.03.2011 அன்று காலை 11மணிக்கு கரூர் PLA ரான் ரெஸிடென்சியில் மண்ணக மக்களுக்காய் விண்ணகத்தூது என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  மெளலவி கலீலுல்லாஹ் மழாஹிரி கிராஅத் ஓதினார்.  கரூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர் சகோ.ஜஃபருல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.  JIH மாநில அழைப்பியல் துறை செயலாளர் துவக்கவுரையாற்றினார்.  பிறகு LNVN பள்ளியின் தாளாளர் திரு. R.பாலாஜி…

கோவையில் பொதுக்கூட்டம்

27.2.2011 அன்று கோவை கோட்டை இக்பால் திடலில் இறைத்தூதர் வாரத்திற்கான சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  SIO சகோ. நிஸார் கிராஅத் ஓதினார்.  அவரை தொடர்ந்து கோட்டை JIH கிளை தலைவர் சகோ.அபுதாஹிர் வரவேற்புரையாற்றினார். JIH கோவை மாநகர தலைவர் சகோ.கே.ஏ.சையத் இப்ராஹிம் தலைமையுரையாற்றினார்.  பிறகு சகோ.ஆசிக் அலி சிற்றுரையாற்றினார். பிறகு மெளலவி இஸ்மாயில் இம்தாதி நபி நேசமா?…

இறைதூதர் வாரம் திருப்பூர், தேனி மாவட்டங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாநகரக் கிளையின் சார்பாக 13.2.2011 அன்று மாலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ். ஷாஹுல் ஹமீத் இறைமறை வசனங்களை ஓதினார். கோவை மண்டல அமைப்பாளர் கே.எம். முஹம்மத் தலைமை தாங்கினார். அனைவரையும் கே.பி.ஹஸன் வரவேற்றார். கோவை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பண்பியல் துறைத் தலைவர் மௌலவி…

சென்னையில் இறைத்தூதர் வார சிறப்பு நிகழ்ச்சி

19.2.2011 அன்று மாலை சென்னை தாங்கல் பகுதியில் இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ.கே.ஜலாலுதீன் (மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்) கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார். 20.2.2011 அன்று மாலை பழைய வண்ணாரப்பேட்டையில் இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  வேலூர் இஸ்லாமிக் செண்டர் பேராசிரியர் மெளலவி நூஹ் மஹ்ளரி சிறப்புரையாற்றினார்.